வவுனியா, மதுராநகர் பகுதியில் கட்டில்லாத பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்து 10 வயது சிறுவன் ஒருவர் மரணமடைந்துள்ளதாக சிதம்பரபுரம் பொலிசார் தெரிவித்தனர்.
இன்று (18) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, மதுராநகர் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 10 வயது சிறுவன் அருகில் காணப்பட்ட கட்டில்லாத பாழடைந்த கிணற்றில் மீன் பிடிப்பதற்காக தூண்டில் போட்ட போது தவறி விழுந்து மரணமடைந்துள்ளார்.
மகனை காணவில்லை என தந்தை தேடிச் சென்ற போது மகன் தூண்டிலுடன் கிணற்றில் விழுந்து கிடந்துள்ளார். இதனையடுத்து அயலவர்கள் துணையுடன் மீட்கப்பட்ட போதும் குறித்த சிறுவன் மரணமடைந்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற சிதம்பரபுரம் பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். குறித்த சம்பவத்தில் 10 வயதுடைய கனசுந்தரம் சம்சன் என்ற சிறுவனே மரணமடைந்தவராவார்.