ரம்புக்கனையில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதை பொலிசார் உறுதி செய்துள்ளர்.
முச்சக்கரவண்டிக்கு தீ வைக்கப்பட்டதுடன், எரிபொருள் பவுசருக்கு எரியூட்ட முற்பட்டதை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தினார்.
நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாததால், போராட்டக்காரர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
அப்பகுதியில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது என்றார்.
Shooting has started…!!! @GotabayaR your disgusting..!!! #GotaGoHome #SriLanka pic.twitter.com/iP4acBzDeD
— Chamith Wijesundera (@chamithwije) April 19, 2022
ரம்புக்கனையில் நடந்த நீண்ட போராட்டத்தை கலைக்க இன்று மாலை பொலிசார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டனர். இதை தொடர்ந்து மோதல் வெடித்தது. பொலிசாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், 12 பேர் காயமடைந்தனர். அவர்களில் இருவரின் நிலைமை மோசமாக உள்ளது.
Update: Police Spokesperson confirms that the police fired at protesters after a three-wheeler was set on fire and protestors attempted to set fire to a fuel bowser. As the situation couldn’t be controlled the police fired at the protesters. The army has been deployed in the area pic.twitter.com/Xaf9S8ry3G
— DailyMirror (@Dailymirror_SL) April 19, 2022