25 C
Jaffna
January 8, 2025
Pagetamil
இலங்கை

விலகிச் சென்றவர்களிற்கு ஆசை வலை விரிக்கும் கோட்டா அரசு!

ஆளும் பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் இருந்து விலகிய சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்களைஈ வலைவீசி வளைத்துப் பிடிக்கும் தீவிர முயற்சியில் கோட்டாபய அரசு ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கத்தின் இரண்டு சிரேஷ்ட உறுப்பினர்களும் வடமேல் மற்றும் மேல் மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு உறுப்பினர்களும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.

அரசாங்கத்தில் இருந்து விலகிய சுயேட்சை எம்.பி.க்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களை அரசாங்கத்துடன் இணைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டதாகவும் அவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்கள் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த நடவடிக்கையின் பலனாக கடந்த வாரம் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார அரசாங்கத்தில் இணைந்து இராஜாங்க அமைச்சர் பதவியைப் பெற்று மேலும் பலரை அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக அறியமுடிகிறது.

பாராளுமன்ற உறுப்பினர்களான நிமல் சிறிபால டி சில்வா, அனுர பிரதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயந்த, ஜகத் புஷ்பகுமார, அசங்க நவரத்ன, உத்திக பிரேமரத்ன மற்றும் காமினி வலேபொட ஆகியோரையும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் பதவியை நிமல் சிறிபால டி சில்வாவுக்கும், கலாசார அமைச்சர் பதவியை உத்திக பிரேமரத்னவுக்கும் வழங்க அரசாங்கம் முன்வந்துள்ளதாக தெரியவருகிறது. எனினும் இவர்கள் அனைவரும் அரசாங்கத்தின் பிரேரணையை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

11 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

east tamil

“இந்தியாவிடம் முட்டை வாங்கி சீனாவுக்கு கோழி விற்பது நகைப்புக்குறியது” – சசிகுமார்

east tamil

தனியார் பேருந்து வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது!

Pagetamil

கிளிநொச்சி பேரூந்து நிலையத்திலிருந்து வெளியேறும் மலக் கழிவை உடனடியாக தடுக்க தவறின் சட்ட நடவடிக்கை – கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி

Pagetamil

அரசியல் தீர்வைப் பற்றிப் பற்றிய கதை (விடல்)கள்

Pagetamil

Leave a Comment