நாடாளுமன்ற உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகள் கணக்காய்விற்கு உட்படுத்தப்பட்டால் முதலில் அவரது சொத்துக்கள் கணக்காய்வு செய்யப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமண வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், 225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலதிகமாக, பிரதேச சபை மற்றும் மாகாண சபைகளின் முன்னாள் மற்றும் தற்போதைய உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகளின் சொத்துக்கள் தொடர்பில் கணக்காய்வு நடத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது என்றார்.
225 எம்.பி.க்களும் இன்று திருடர்கள் என்று முத்திரை குத்தப்பட்டுள்ளனர்.
இந்த கூற்று பொருந்தக்கூடிய சில நபர்கள் பாராளுமன்றத்தில் இருக்கும்போது, இந்த வகைக்குள் வராத சிலர் உள்ளனர்.
1977 ஆம் ஆண்டிலிருந்து பாராளுமன்றம் இவ்வாறான பல நபர்களைக் கண்டுள்ளது என வீரசிங்க கூறினார்.
நிரபராதி அரசியல்வாதிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களை அங்கீகரித்து அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வீரசிங்க கோரியுள்ளார்.