26.9 C
Jaffna
January 27, 2025
Pagetamil
இலங்கை

உகண்டாவிற்கு இலங்கையிலிருந்து பணம் போனது உண்மையா?: அச்சிட்ட நிறுவனத்தின் தகவல்!

இலங்கையில் இருந்து உகாண்டாவிற்கு அச்சிடப்பட்ட பணத்ததாள்கள் எடுத்துச் செல்லப்பட்ட விவகாரம் சர்ச்சையாகியுள்ள நிலையில், பிரித்தானிய நாணய அச்சிடும் நிறுவனமான De La Rue ட்விட்டரில் ஒரு குறுகிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.

உலகளவில் பல நாடுகளிற்கு நாணயத்தாள்களை அச்சிட்டு விநியோகிக்கும் மேற்படி நிறுவனத்தின் தொழிற்சாலைகள் உலகின் பல நாடுகளிலும் உள்ளன. இலங்கையிலும் தொழிற்சாலை உள்ளது.

அந்த நிறுவனத்தினால் அச்சிடப்பட்ட உகாண்டா நாணயத் தாள்களுடன் சரக்கு விமானங்கள் பிப்ரவரி 2021 இல் உகாண்டாவிற்கு புறப்பட்டதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏற்கனவே உறுதிப்படுத்தியது.

இந்த நிலையில் De La Rue நிறுவனத்திடம் நாணயத்தாள் அச்சிட்ட விவகாரத்தின் உண்மைத்தன்மை பற்றி சமூகஊடக பயனர்கள் கேள்வியெழுப்பினர். இதையடுத்தே De La Rue நிறுவனம் குறுகிய அறிக்கை வெளியிட்டது.

De La Rue வெளியிட்ட அறிக்கையில், உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகளில் பாதிக்கு மேற்பட்டவைக்கான நாணயத்தாள்களை இலங்கை, கென்யா, மால்டா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள எங்கள் தளங்களில் இருந்து De La Rue வழங்குகிறது. , எங்கள் வாடிக்கையாளர்களைப் பற்றி நாங்கள் கருத்து தெரிவிப்பதில்லை என குறிப்பிட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காரில் மதுபோதையில் வந்திறங்கிய மாணவி – ஆசிரியர் கைது

east tamil

மீனவ பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சி – ரவிகரன்

east tamil

மஹிந்தவின் உடல் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும் – கோரிக்கை

east tamil

பெப்ரவரி 4 கரிநாளாக பிரகடனப்படுத்த அழைப்பு!

Pagetamil

மஹிந்தவுக்கும் வீட்டுத்திட்டத்தில் வீடு வழங்கப்படலாம்!

Pagetamil

Leave a Comment