கொழும்பு காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை நிராகரித்துள்ளனர்.
ஜனாதிபதி, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்களும் வீட்டுக்குச் செல்வதைத் தவிர பிரச்சினைக்கு வேறு தீர்வு இல்லை எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
போராட்டம் தொடரும் என இளைஞர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று விசேட அறிக்கையொன்றை விடுத்து கொழும்பு காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.