Pagetamil
முக்கியச் செய்திகள்

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வலியுறுத்தி தமிழ் கட்சிகள் கூட்டாக போராட்டத்திற்கு ஏற்பாடு!

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்து, பாராளுமன்ற ஆட்சி அதிகாரமுள்ள முறைமையை வலியுறுத்தி தமிழ் தரப்புக்கள் ஒன்றிணைந்து போராட்டங்களை முன்னெடுக்கும் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன் முன்னோடி கலந்துரையாடல் எதிர்வரும் 16ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடலுக்கு தமிழ் அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள், மனித உரிமை அமைப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்களிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நகர்வை  தமிழ் தேசிய கட்சி முன்மொழிந்திருந்தது. அனேக தமிழ் கட்சிகள் இதனை ஏற்றுக்கொண்டு, கூட்டு நகர்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக தமிழ் தேசிய பரப்பிலுள்ள அரசியல் கட்சிகள், மற்றும் சிவில் அமைப்புக்கள், மனித உரிமைகள் அமைப்புக்களிற்கு கலந்துரையாடல் அழைப்பு விடுக்கப்பட்டது.

16ஆம் திகதி யாழில் இந்த கலந்துரையாடல் இடம்பெறும்.

அனேகமாக 18ஆம் திகதி முதலாவது பேரணி வடக்கின் ஏதாவது ஒரு மாவட்டத்தில் ஏற்பாடு செய்யலாமென, ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இது தொடர்பில் தமிழ் தேசிய கட்சியின் தலைவர் என்.சிறிகாந்தா தமிழ்பக்கத்திடம் கருத்து தெரிவித்த போது, பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட இலங்கையின் அனேகமாக பிரச்சனைகளிற்கு தீர்வு காண்பதற்கு நிறைவேற்றதிகார ஆட்சிமுறை ஒழிப்பது முக்கியம். நிதி பொறுப்புக்கூறும் ஒரு அமைப்பு முறை உருவாக வேண்டும். பாராளுமன்றத்திற்கு முழுமையான அதிகாரம் வழங்குவதே பொருத்தமானது.

இது முழு நாட்டிற்கும் நல்லது. சிறுபான்மையினருக்கு விசேட நன்மைகள் உள்ளன. நிறைவேற்றதிகார முறைமை அல்லாத பாராளுமன்ற ஆட்சி முறை, சிறுபான்மையினருக்கு இப்போதுள்ளதை விட ஓரளவு பாதுகாப்பான நிலைமையை ஏற்படுத்தும். இந்த அடிப்படையிலேயே, இந்த நகர்வை ஆரம்பித்துள்ளோம் என்றார்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பதவி விலகுவதாக அறிவித்தார் கனடா பிரதமர்: அமெரிக்காவின் புதிய மாநிலமாக இணைய ட்ரம்ப் அழைப்பு!

Pagetamil

முல்லைத்தீவில் கரையொதுங்கியவர்கள் உண்மையான அகதிகளா என ஆராய்கிறதாம் அனுர அரசு!

Pagetamil

முக்கிய தீர்மானங்கள் இல்லை… வழக்கம் போல கூடிக்கலைந்தது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி!

Pagetamil

அனுர ஜன.13- 17 வரை சீன விஜயம்!

Pagetamil

கற்பனைக் குதிரைக்கு வயது 75

Pagetamil

Leave a Comment