நிதியமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு தமக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், தாம் அதனை நிராகரித்ததாக முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்ததாகவும், ஆனால் தற்போது நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக அதனை ஏற்காமல் இருக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சில அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் கடினமானது எனவும், அவ்வாறான சூழ்நிலையில் தான் பதவியை ஏற்றுக்கொண்டாலும் தனது பொறுப்புக்களை நிறைவேற்றுவது மிகவும் கடினமாக இருந்திருக்கும் எனவும் குணவர்தன குறிப்பிட்டார்.
பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து இந்த உண்மையை பாராளுமன்றத்தில் விளக்கிய போதும் எவருக்கும் புரியவில்லை எனவும் முன்னாள் அமைச்சர் தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1