அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையொப்பமிட்டனர்
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையொப்பமிட்டுள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள எதிர்கட்சி அலுவலகத்தில் இன்று (13) குறித்த இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது கையொப்பத்தையிட்டு தமது எதிர்ப்பையும் பதிவு செய்தனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அரசாங்கததிற்கு எதிராக நாட்டின் பிரதான எதிர்கட்சியாகிய ஐக்கிய மக்கள் சக்தியினால் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படவுள்ளது.
இவ் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் ஆகிய இருவரும் கையொப்பமிட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.