Pagetamil
உலகம்

நியூயோர்க் துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் காயம்!

அமெரிக்காவின் நியூயோர்க் அருகே உள்ள புரூக்ளின் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில், 13 பேர் காயமடைந்துள்ளனர்.

உள்ளூர் நேரப்படி காலை 8.30 மணியளவில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் வரை காயம் அடைந்து இருக்கலாம் என்று முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. எனினும், துப்பாக்கிச்சூடு யார் நடத்தியது என்ற விவரம் எதுவும் தற்போது வரை வெளியிடப்படவில்லை.

காலை நேரம் என்பதால், பயணிகள் கூட்டம் சற்று அதிகமாக இருந்தது. துப்பாக்கியால் சுட்டதில் காயம் அடைந்தவர்கள் சிலர் ரத்த காயங்களுடன் வெளியே செல்வதையும் அவர்களுக்கு அங்கிருந்த சக பயணிகள் உதவி அளித்து வரும் காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளன.

நியூயோர்க் காவல்துறை வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில் “விசாரணை நடைபெற்று வருவதால் புரூக்ளின் 4வது அவென்யூ பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். சுற்றுவட்டார பகுதிகளில் பயண தாமதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது“ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வெடிபொருட்கள் கண்டறியப்பட்டதாக சில செய்திகள் வெளியான நிலையில், செயல்பாட்டில் உள்ள வெடிபொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என்று காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

இது பயங்கரவாத செயலாக இருக்குமா? என்பதை இப்போதைக்கு உறுதிப்படுத்த அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நேபாளத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த இந்தியர்

east tamil

அமேசோன் நிறுவன 1,700 ஊழியர்கள் பணிநீக்கம்

east tamil

பிரித்தானிய கடல் எல்லைக்குள் நுழைந்த 2வது ரஷ்ய கப்பல்

east tamil

மியன்மாரில் நிலநடுக்கம்

east tamil

உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகும் திகதி அறிவிப்பு

east tamil

Leave a Comment