237 மருந்துகளிற்கு தட்டுப்பாடு!

Date:

அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் தற்போது 237 மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் செனல் பெர்னாண்டோ, மருந்து தட்டுப்பாட்டினால் அரச வைத்தியசாலைகளும் தனியார் துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதய நோயாளிகள், இருமல் மற்றும் சளி மற்றும் வெறிநாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான மருந்துகள் தற்போது பல வைத்தியசாலைகளில் இல்லை என்று குறிப்பிட்டார்.

விசேட சிகிச்சைகள் தேவைப்படும் நபர்களையும் மருந்து தட்டுப்பாடு தாக்கும் எனவும் அவர் கூறினார்.

டொலர் நெருக்கடியானது முழு நாட்டையும் தாக்கியுள்ளதாகவும், எனவே மருந்து தட்டுப்பாடு அரச வைத்தியசாலைகளை மட்டுமன்றி தனியார் வைத்தியசாலைகள் மற்றும் மருந்தகங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் குறிப்பிட்டார்.

கொரோனா காலத்தில் உருவாக்கப்பட்ட இதுகாம திட்டத்தின் நிதியை நாட்டில் சுகாதார சேவையை பேணுவதற்கு செலவிட அரசாங்கம் உத்தேசித்துள்ளதா என டொக்டர் செனல் பெர்னாண்டோ கேள்வி எழுப்பினார்.

மத்திய வங்கியின் ஆளுநரே தலைவராக செயற்படுவதாகவும், எனவே சுகாதாரத் துறையானது பல சவால்களைச் சமாளிக்க முடியாமல் திணறி வருவதால், நிதியைப் பயன்படுத்துவது குறித்து புதிய ஆளுநரிடம் இருந்து தெளிவுபடுத்தலை விரும்புவதாகவும் அவர் கூறினார்.

மக்கள் பல தியாகங்களைச் செய்து நிதியத்திற்கு நன்கொடைகளை வழங்கியதாகவும் அதே மக்கள் தற்போது பல சவால்களை எதிர்கொள்வதாகவும் செனல் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

COVID-19 தொற்றுநோய்களின் போது சுகாதாரத் துறையை ஆதரிப்பதற்காக இதுகாமா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது என்று அவர் கூறினார்; எனவே, நன்கொடைகள் நாட்டின் சுகாதார சேவையை கடினமான சூழ்நிலைகளில் பயன்படுத்த வேண்டும் என்றார்.

spot_imgspot_img

More like this
Related

தாய்ப்பாசத்தில் நாமலை அடித்துக்கொள்ள ஆளே கிடையாதாம்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அலி...

பல மாதங்களாக காணாமல் போயிருந்த 15 வயது சிறுமி அடர்ந்த காட்டு குகையில் கைக்குழந்தையுடன் மீட்பு

சுமார் ஐந்து மாதங்களாகக் காணாமல் போயிருந்த 15 வயது சிறுமி ஒருவரை,...

ரஷ்யாவிற்கு பிராந்தியங்களை விட்டுக்கொடுப்பதற்கு ஈடாக உக்ரைன் நேட்டோவில் சேரும் வாய்ப்பு: அமெரிக்கா புதிய முன்மொழிவு!

நவம்பர் 13 அன்று உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறுகையில், டான்பாஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்