காதலி உயிரிழந்த சோகத்தில் காதலனும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை பகுதியில் நேற்று (11) இந்த சம்பவம் நடந்தது.
உதயகுமார் கனிஸ்ரன் (23) என்ற ஊவா பல்கலைகழக மாணவனே தற்கொலை செய்து கொண்டுள்ளார். பருத்தியடைப்பு காட்டுப்பகுதியில் இருந்து நேற்று மாணவனின் சடலம் மீட்கப்பட்டது.
இவரது காதலி ஒரு மாதத்தின் முன்னர் தற்கொலை செய்து கொண்டிருந்தார். இதன்பின் விரக்தியடைந்த நிலையில் வாழ்ந்து வந்த இளைஞன், நேற்று தற்கொலை செய்து கொண்டார்.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1