நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் நடிகை காவ்யா மாதவன் உடந்தையாக இருந்தது தொடரபான தொலைபேசி உரையாடல் ஆதாரம் வெளியாகியுள்ளது.
கேரளாவில் பிரபல நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் மீதான விசாரணை மீண்டும் சூடு பிடித்துள்ளது.
ஏற்கனவே அவர் கைதான போதும், போதிய ஆதாரங்கள் இல்லாமல் பியைில் விடுவிக்கப்பட்டு விட்டார்.
இந்த நிலையில் கேரள பொலிசார் மீண்டும் வலுவான ஆதாரங்களை திரட்டி வருகிறார்கள். இதன்படி திலீப் மீண்டும் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதுடன், அவரது தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டு, அழிக்கப்பட்ட பல ஆதாரங்கள் மீட்கப்பட்டுள்ளன.
பாவனா பலாத்கார வழக்கில் திலீப் மட்டுமல்ல, அவரது மனைவி நடிகை காவ்யா மாதவனுக்கு தொடர்பு உள்ளது என்பதை குறிக்கும் தொலைபேசி உரையாடல் வெளியாகி பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.
2017ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த வழக்கில் 10 பேர் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், 7 பேரை பொலிஸார் கைது செய்தனர். இதையடுத்து நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் பொலிசார், நீதிமன்றத்தில் 3 தொலைபேசி உரையாடல் பதிவுகளை சமர்ப்பித்துள்ளனர்.
திலீப்பின் உறவினர் சுராஜ் மற்றும் நண்பர் சரத் இடையேயான உரையாடலில், காவ்யா மாதவன் சதியில் ஈடுபட்டதற்கான அறிகுறிகள் உள்ளன. உரையாடல் பதிவில், காவ்யா மாதவன் தனது நண்பர்களை சிக்கலில் தள்ள விரும்புவதாகக் கூறப்படுகிறது.
முதல் உரையாடல் சுராஜுக்கும் சரத்துக்கும் இடையேயும். இரண்டாவது வழக்கறிஞர் சுரேஷ் மேனனுக்கும் திலீப்புக்கும் இடையே நடக்கும் உரையாடல். மூன்றாவதாக, டாக்டர் ஹைதரலி மற்றும் சூரஜ் இடையேயான உரையாடல்.
இந்த உரையாடல்கள் வெளியானதை தொடர்ந்து, காவ்யாவிடம் விசாரணைக் குழு திங்கள்கிழமை விசாரிக்க உள்ளது. விசாரணைக்கு ஆஜராகுமாறு காவ்யாவுக்கு விசாரணைக் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அத்துடன், பாவனா மீது திலீப், காவ்யாவெறுப்பில் இருந்தமைக்கான சாட்சிகளையும் பொலிசார் திரட்டியுள்ளனர்.




