தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் காணப்பட்ட பல்வேறு சர்ச்சைகளுக்கு முடிவுகட்டி புதிய நிர்வாகம் இன்றைய தினம் தெரிவு செய்யப்பட்டது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று காலை 11மணியளவில் யாழ்ப்பாணத்தில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்றபோதே நிர்வாக தெரிவு மேற்கொள்ளப்பட்டது.
இதன்படி அக்கட்சியின் தலைவராக சட்டத்தரணி பரமசிவம் ஸ்ரீதரனும் கட்சியின் செயலாளர் நாயகமாக வீ.ஆனந்தசங்கரியும் தெரிவு செய்யப்பட்டனர்.
இதன் பின்னர் கட்சியின் தலைவர் செயலாளர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.