சினிமா

ஆலியா- ரன்பீர் திருமண திகதி முடிவானது; முக்கிய பிரமுகர்களிற்கு மட்டுமே அழைப்பு!

ஆலியா பட், ரன்பீர் கபூர் திருமணம் இன்னும் சில தினங்களில் நடக்கவுள்ளது.

201ஆம் ஆண்டிலிருந்து ஆலியாவும், ரன்பீரும் காதலித்து வருகின்றனர். இருவரும் ஒன்றாக ஒரு சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். அதைத் தாண்டி இருவரையும் பொது இடங்களில் ஒன்றாகப் பார்ப்பது அரிதே.

கொரோனா ஊரடங்கு சமயத்தின் போது இருவரும் ஒரே வீட்டில் தங்கியிருந்தனர். இதன்பின் இருவரும் குடும்ப மற்றும் பொது நிகழ்வுகளில் ஒன்றாக கலந்துகொண்டு தங்கள் காதலை வெளிப்படுத்தினர்.

ஐந்து வருடக் காதலின் பின்னர் இருவரும் திருமணம் செய்யவுள்ளனர். இவர்களின் திருமணம் குறித்த செய்தி தான் கடந்த சில நாட்களாக பாலிவுட் வட்டாரங்களில் பேசுபொருளாக இருந்தன. திருமண திகதி மற்றும் பிற விவரங்கள் எதுவும் பொதுவெளியில் வெளியாகாமல் இருந்தது வந்தது. இந்தநிலையில் அதன் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

ஆலியாவின் உறவினர் ஒருவர் இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.

அதன்படி ஆலியா மற்றும் ரன்பீர் ஏப்ரல் 14ஆம் திகதி திருமணம் செய்யவுள்ளது உறுதியாகியுள்ளது. திருமண விழா மொத்தம் நான்கு நாட்கள் நடக்கவுள்ளது என்றும் ஏப்ரல் 13ஆம் திகதி மெஹந்தி விழாவுடன் தொடங்கும் என்றும் அந்த உறவினர் ஊடகங்களிடம் கூறியுள்ளார்.

இதனிடையே, திருமணத்தில் திருமண விருந்தினர் பட்டியலில் கரண் ஜோஹர், ஷாருக்கான், சஞ்சய் லீலா பன்சாலி, அகன்ஷா ரஞ்சன், அனுஷ்கா ரஞ்சன், ரோஹித் தவான், வருண் தவான், ஜோயா அக்தர் உள்ளிட்ட ஒரு சில பிரபலங்கள் மட்டுமே கலந்துகொள்ளவுள்ளனர் என்று சொல்லப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

ஹிந்தி நடிகைகளுக்கு போட்டியாக கீர்த்தி பாண்டியன்!

divya divya

பெட்ரோலை திருமண பரிசாக கொடுத்த நடிகர் மயில்சாமி

divya divya

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுக்கு வில்லனாகும் அர்ஜுன்!

divya divya

Leave a Comment

error: Alert: Content is protected !!