ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தனது ஒரு வருட கால சம்பளத்தை உத்தியோகபூர்வமாக இன்று துறந்துள்ளார்.
நேற்றைய பாராளுமன்ற அமர்வின் போது வாக்குறுதியளித்தபடி தனது பாராளுமன்ற சம்பளத்தை உத்தியோகபூர்வமாக கைவிடுவதாக, நாடாளுமன்ற செயலாளரிடம் உத்தியோகபூர்வமாக கடிதம் கையளித்தார்.
தற்போது நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்களிற்கு ஏற்பட்டுள்ள சுமையை குறைக்க இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
2