அமைச்சரவை இராஜினாமா செய்த போதிலும், முன்னாள் அமைச்சர்கள் இன்னமும் தமது உத்தியோகபூர்வ இல்லங்கள், வாகனங்கள் மற்றும் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட ஏனைய வசதிகளைப் பயன்படுத்துவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், முன்னாள் அமைச்சர்களுக்கு இன்னும் அமைச்சு மெய்ப்பாதுகாவலர்களின் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பில் உள்ள கெப்பிட்டிபொல மாவத்தை மற்றும் டொரிங்டன் பிளேஸில் அமைச்சர்களுக்கு உத்தியோகபூர்வ குடியிருப்பு உள்ளது. முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் இப்போதும் அங்குதான் வசிக்கிறார்கள்.
அமைச்சரவை அமைச்சர்கள் இராஜினாமா செய்ததன் பின்னர் பாராளுமன்ற ஆசனங்களை மாத்திரம் பெற்றுள்ள முன்னாள் அமைச்சர்கள் அந்த வீடுகளை விட்டு வெளியேறி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சொந்தமான உத்தியோகபூர்வ இல்லங்களுக்கு செல்ல வேண்டும் எனவும் ஆனால் எந்தவொரு அமைச்சரும் அவ்வாறாக வீடுகளை மாற்றவில்லை எனவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.