யாழ்ப்பாணத்தில் காணாமல் போன பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டு, புதைக்கப்பட்ட நிலையில், பொலிசாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் 1ஆம் திகதி அரியாலை, மணியந்தோட்டம் பகுதியில் காணாமல் போன குடும்பப் பெண்ணே கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளார்.
ஜெசிந்தா என அழைக்கப்படும் 48 வயதான பெண்ணை கொலை செய்து, தமது வீட்டின் பின்புறத்தில் புதைத்த சந்தேகநபர்களான கணவனும், மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சடலத்தை புதைக்க உதவிய இளைஞன் ஒருவரும் கைதாகியுள்ளார்.
கணவனை பிரிந்து வாழும் மேற்படி பெண், வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார். அவரிடம் 3 இலட்சம் ரூபா பணம் வாங்கிய ஒருவர், பணத்தை திருப்பி கொடுக்காமல், பெண்ணை கொலை செய்துள்ளார்.
பணத்தை தருவதாக கூறி, பெண்ணை பிறிதொரு இடத்திற்கு அழைத்து கொலை செய்யப்பட்டார்.
பெண்ணின் சடலத்தையும், அவரது மோட்டார் சைக்கிளையும் தமது வீட்டின் பின்புறம் குழிதோண்டி புதைத்துள்ளனர். கணவனும், மனைவியுமாக இந்த கொடூர கொலையை செய்துள்ளார்.
தாயை காணாதததையடுத்து, மகன் முறைப்பாடு செய்திருந்தார்.
சடலமும் மோட்டார் சைக்கிளும் குழிக்குள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை பெற்று நாளை அவை மீட்கப்படும்.