Pagetamil
இலங்கை

கொழும்பிற்கு அருகில் இரகசியமாக சேமிக்கப்படும் பெருமளவு டீசல்: அதிர்ச்சிக் காரணம்!

நாட்டில் தங்கத்தை விடவும் தட்டுப்பாடானதாக டீசல் மாறியுள்ள நிலையில், அம்பத்தளை நகரில் உள்ள CEYPETCO நிரப்பு நிலையத்திற்கு நேற்று முன்தினம் 79,200 லீற்றர் டீசல் கொண்ட மொத்தம் 12 பவுசர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
என்னும், அந்த டீசல் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படவில்லை என பவுசர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் 36,000 லீற்றர் கொண்ட ஆறு பவுசர்கள் நேற்று எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அனுப்பப்படவிருந்தாக அவர்கள் தெரிவித்தனர்.

விநியோகஸ்தர்கள் மற்றும் அந்த பகுதி நுகர்வோர்களிடமிருந்து பல புகார்கள் வந்ததை அடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.

கடந்த ஏழெட்டு நாட்களாக டீசல் விநியோகிக்கப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். எனினும் முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

புதிதாக திறக்கப்பட்ட அந்த எரிபொருள் நிரப்பு நிலையம் ஜனாதிபதி செயலகத்தின் பிரத்தியேக செயலாளர் ஒருவரின் நெருங்கிய உறவினருக்கு சொந்தமானது என விநியோகஸ்ர்கள் சங்கம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த பிரத்தியேக செயலாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய எரிபொருள் இருப்புக்கள் அம்பத்தளை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சங்கம் தெரிவித்துள்ளது.

எனினும், ஏற்கனவே நிரப்பு நிலையத்திற்கு அனுப்பப்பட்ட டீசல், CEYPETCO நுகர்வோர் எவருக்கும் நிரப்பு நிலைய உரிமையாளர்களால் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு பதிலாக, கொழும்பு டூப்ளிகேஷன் வீதியில் உள்ள பல ஹோட்டல்களுக்கு டீசல் லிட்டருக்கு ரூ 300 ரூபாய் என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

2025வது ஆண்டின் முதல் பாராளுமன்ற அமர்வு இன்று

east tamil

வவுனியாவிற்கு கடத்தப்பட்ட கஞ்சா மீட்பு: பெண் உட்பட இருவர் கைது

east tamil

கல்கிசை: ஆயுததாரிகளின் துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழப்பு

east tamil

வடக்கு கிழக்கில் புராதன பௌத்த தளங்களை பாதுகாக்க விசேட திட்டங்கள் – புத்தசாசன அமைச்சர்

east tamil

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

Pagetamil

Leave a Comment