25.4 C
Jaffna
January 23, 2025
Pagetamil
இலங்கை

அனுரகுமாரவின் வாகனத்தில் பயணிக்கும் ஹெல்மெட் நபர் யார்?: அலறும் அரச தரப்பு!

ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க பயணித்த டபுள் கப் வண்டியில் ஹெல்மெட் அணிந்திருந்தபடி பயணித்தவர்கள் யார் என்பதை உடனடியாக கண்டறியுமாறு சபாநாயகர் மற்றும் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுப்பதாக அரசாங்கத்தின் பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவர் யார், எங்கு இறங்கினார் என்பதை கண்டறிய அனைத்து சிசிடிவி காட்சிகளையும் பெற வேண்டும் என்றும் அரசாங்கத்தின் பிரதம கொறடா கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக இன்று நாடாளுமன்றத்தல் நடந்த விவாதத்தின் போது, மிரிஹான சம்பவத்தின் பின்னணியில் ஜேவிபி இருந்ததாகவும், சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த ஜேவிபி தலைவர் அநுரகுமாரவின் வாகனத்தில் ஹெல்மெட் அணிந்த ஒருவர் ஏறிச் சென்றதாகவும் அரச தரப்பு குற்றம்சாட்டியது.

எனினும்,இந்த குற்றச்சாட்டை நிராகரித்த அநுரகுமார, தனது பாதுகாப்பை உறுதி செய்யும் உரிமை தனக்குள்ளதாகவும், ஏதேனும் விசாரணை நடத்தப்பட்டால் தனது பாதுகாவலர்கள் அதற்கு முன்னிலையாவார்கள் என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

போதையில் தள்ளாடும் பொலிசார்

Pagetamil

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத் துறையின் சர்வதேச சட்ட ஆய்வு மாநாடு சனியன்று ஆரம்பம்!

Pagetamil

மூன்றாவது தடவையாகவும் இரணைமடு வான்கதவுகள் திறக்கப்பட்டமையால் பாதிப்பு

Pagetamil

வத்திராயனில் பொறுப்பின்றி செயற்படும் உத்தியோகத்தர்கள்

east tamil

ஆவரங்கால் வாகன விபத்தில் இளம் குடும்பஸ்தரின் மரணம்

east tamil

Leave a Comment