24.5 C
Jaffna
January 24, 2025
Pagetamil
இலங்கை

ஜனாதிபதியின் கோரிக்கையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நிராகரித்துள்ளது

மீண்டும் அமைச்சரவை பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி விடுத்த கோரிக்கையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நிராகரித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும், முன்னாள் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவதற்கு கட்சி எடுத்த தீர்மானத்தை மாற்ற முடியாது எனவும், மக்களின் கோரிக்கையை நிராகரிக்க முடியாது எனவும் தமது கட்சியின் பாராளுமன்ற குழு ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாக நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடிக்கு தீர்வு காணும் திட்டத்தை முன்வைக்குமாறும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று (6) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 20 வது திருத்தச் சட்டத்தில் திருத்தம் செய்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் எந்தவொரு நடவடிக்கைக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மஹிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக்க, லசந்த அழகியவன்ன, ஷான் விஜயலால் டி சில்வா, ஜகத் புஷ்பகுமார, சாமர சம்பத், அங்கஜன் ராமநாதன். மற்றும் கலாநிதி சுரேன் ராகவன் ஆகியோரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

போதையில் தள்ளாடும் பொலிசார்

Pagetamil

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத் துறையின் சர்வதேச சட்ட ஆய்வு மாநாடு சனியன்று ஆரம்பம்!

Pagetamil

மூன்றாவது தடவையாகவும் இரணைமடு வான்கதவுகள் திறக்கப்பட்டமையால் பாதிப்பு

Pagetamil

வத்திராயனில் பொறுப்பின்றி செயற்படும் உத்தியோகத்தர்கள்

east tamil

ஆவரங்கால் வாகன விபத்தில் இளம் குடும்பஸ்தரின் மரணம்

east tamil

Leave a Comment