சமல் சிவப்பு சால்வையின்றி நாடாளுமன்றம் வந்தது ஏன்?

Date:

ராஜபக்‌ஷ குடும்பத்தினரின் பிரதான அடையாளமாக, கழுத்தில் அணியும் சிவப்பு நிற சால்வையை குறிப்பிடலாம். அந்த குடும்பத்தில் திடீர் அரசியல்வாதியான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தவிர்ந்த மற்றைய அனைத்து ராஜபக்‌ஷக்களும் சிவப்பு சால்வையை தவறாமல் அணிவார்கள்.

இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்ட  முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ சிவப்பு சால்வையின்றி கலந்து கொண்டிருந்தார்.

நாடு முழுவதும் ராஜபக்‌ஷ குடும்பத்திற்கு எதிரான குரல்களும், போராட்டங்களும் எழுந்துள்ள நிலையில், சமல் ராஜபக்‌ஷ இன்று சால்வையின்றி சபைக்கு வந்தது கவனித்திற்குரியதாகியது.

சால்வை அணியாதது குறித்து ஊடகவியலாளர்கள் குழு அவரிடம் கேள்வி எழுப்பிய போது, ​​அவர் உறுதியான பதில் அளிக்கவில்லை.

இன்றைய சபை அமர்வில் கலந்து கொண்ட பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ மற்றும் இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ ஆகியோரும் சிவப்பு சால்வை அணிந்திருந்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஜி.வி.பிரகாஷ் ஜோடியாகிறார் மாளவிகா மனோஜ்

சூரி நடித்த ‘கருடன்’, ‘மாமன்’ படங்களைத் தொடர்ந்து லார்க் ஸ்டூடியோஸ் நிறுவனம்...

விஜய் பிரச்சாரத்தில் வேட்பாளர் உட்பட 20 பேர் மயக்கம்

தவெக தலைவர் விஜய் நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு தனி விமானத்தில்...

‘தென் மாநிலங்களுக்கு மாபெரும் வரலாற்று அநீதி’ – கருப்புக் கொடி போராட்டத்தை அறிவித்த ஸ்டாலின்

“மத்திய அரசு கொண்டுவரவுள்ள தொகுதி மறுவரையறை திருத்த மசோதா, தென்மாநிலங்களுக்கும் இழைக்கப்படும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்