27.1 C
Jaffna
December 13, 2024
Pagetamil
இலங்கை

சர்வகட்சி இடைக்கால அரசுக்கு ஜனாதிபதி, பிரதமர் சாதகமான பதில்: விமல்

சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை நியமிக்கும் யோசனைக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடமிருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுடன் இணைந்து ஜனாதிபதி மற்றும் பிரதமரை தனித்தனியாக இந்த பிரேரணை தொடர்பில் சந்தித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் இந்த நெருக்கடிகளுக்கு தீர்வு காண தற்போதைய அமைச்சரவையால் செயற்பட முடியாது எனவும் முன்னாள் அமைச்சர் தெரிவித்தார்.

எனவே, அமைச்சரவையைக் கலைத்துவிட்டு, இடைக்கால அரசாங்கத்துக்கான சர்வகட்சி அல்லது பலதரப்பு உடன்பாட்டை எட்டுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வீரவன்ச தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இலிங்கநகரில் இளைஞர் வள நிலையம் திறப்பு

east pagetamil

படகு கவிழ்ந்து ஒருவர் பலி மட்டக்க்களப்பில் சோகம்

east pagetamil

இணைப்பேராசிரியர் ரிச்சர்ட் பிரியோ நூலக நிறுவனத்துக்கு வருகை

east pagetamil

‘பைத்தியக்காரன் அர்ச்சுனாவை வெளியேற்றுங்கள்’: யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சலசலப்பு!

Pagetamil

யாழ் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்!

Pagetamil

Leave a Comment