யாழ்ப்பாண நகர் பகுதியில் உள்ள கிறீன் கிராஸ் தனியார் விடுதி நீச்சல் தடாகத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண நகரைச் சேர்ந்த 6 பேர் விடுதியில், நேற்றிரவு தங்கியிருந்து மது அருந்திய பின்னர் இரவு 1 மணியின் பின்னர் நீச்சல் தடாகத்தில் நீராட சென்றிருந்தார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, இன்று காலை விடுதி நிர்வாகத்தினர் சடலத்தை அவதானித்து யாழ்ப்பாண பொலிசாருக்கு அறிவித்திருந்த நிலையில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.
எனினும் உயிரிழந்தவருடன் மேலும் பலர் நீராடி இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் கொலையா அல்லது இயற்கை இறப்பா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்