கல்கிசையில் 16 வயது சிறுமியை இணையம் ஊடாக விபச்சாரத்தில் ஈடுபடுத்த வற்புறுத்திய வழக்கின் பிரதான சந்தேக நபர் தலா 10 மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதான நீதவான் சந்திம லியனகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
பிணை எடுப்பவர் நெருங்கிய உறவினராக இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த வழக்கு ஜூன் 30ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது