4 வருடங்கள் மாணவனுடன் உல்லாசம்: ஆசிரியையின் ஆபாச லீலைகள் நீதிமன்றத்தில் அம்பலம்!

Date:

கொழும்பு பிரதேசத்தில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றின் ஆசிரியை, தற்போது 20 வயது இளைஞனை 16 வயது முதல் பாலுறவு கொள்ள தூண்டி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தடுப்பு பிரிவினர் கொழும்பு மேலதிக நீதவான் லோச்சனி அபேவிக்ரமவிற்கு அறிவித்துள்ளனர்.

இலங்கை குற்றவியல் சட்டத்தில் 2006 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க திருத்தப்பட்ட சட்டத்தின் 360 (1) இ பிரிவின் கீழ் குறித்த பெண் குற்றத்தை இழைத்துள்ளதாகவும், அவரை விசாரணைக்கு வருமாறு பலமுறை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அவர் விசாரணையை தவிர்த்து வருவதாகவும் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தடுப்பு பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

குறித்த வழக்கில் முன்பிணை கோரி இன்று (29) நீதிமன்றில் ஆசிரியையினால் கோரிக்கை விடுக்கப்பட்ட போதே இந்தக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

குறித்த மாணவனின் வங்கிக் கணக்கில் 50,000 ரூபாவை அந்தப் பெபண் வைப்பிலிட்டுள்ளார். பாடசாலையின் கணினி ஆய்வகத்தில் சீருடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இருப்பதாகவும் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தற்போது 34 வயதாகும் ஆசிரியை, மாணவன் கல்வி கற்ற பாடசாலையில் தகவல் தொழில்நுட்ப ஆசிரியையாக பணிபுரிந்தார். கடந்த நான்கு ஆண்டுகளாக பாடசாலையிலும், மவுண்ட் லவனியாவிலுள்ள ஹொட்டல் ஒன்று உட்பட பல்வேறு இடங்களிற்கும் அழைத்து சென்று மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.  

spot_imgspot_img

More like this
Related

பங்களாதேஷ் வீரர் முஷ்பிகுர் ரஹீம் டெஸ்டில் இருந்து ஓய்வுபெறுகிறார்!

பங்களாதேஷ் வீரர் முஷ்பிகுர் ரஹீம் 2027 பெப்ரவரியில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு...

இலங்கைக்கு தப்பிவந்த 5 தேடப்படுபவர்கள் சீனாவுக்கு நாடு கடத்தல்

சீன அரசாங்கத்தால் தேடப்பட்டு வந்த ஐந்து சீனப் பிரஜைகள், இலங்கையின் பல்வேறு...

திருப்பரங்குன்றம் கல்த்தூணில் தீபம் ஏற்றப்பட்டது

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல்த்தூணில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இன்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்