யாழ்ப்பாணத்தில், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இருவரை கைது செய்ய சிவில் உடையில் சென்ற பொலிசார் தாக்கப்பட்டுள்ளனர்.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யோகபுரம் பகுதியை சேர்ந்த இருவருக்கு நீதிமன்ற வழக்கு விசாரணைகளுக்கு செல்ல தவறியமையால் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
இதைடுத்து, சுன்னாகம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் இருவர் சிவில் உடையில் அவர்களை கைது செய்ய சென்றனர்.
சந்தேகநபர்கள் தப்பியோடிய போது, பொலிஸ் உத்தியோகத்தர்கள் விரட்டிச் சென்றுள்ளனர். இதன்போது, அங்கிருந்த கும்பல் ஒன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளனர்.




