உக்ரைனின் மீதான இராணுவ நடவடிக்கையின் போது, தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகளை ரஷ்யா பயன்படுத்துவதாக உக்ரைன் குற்றம்சுமத்தியுள்ளது.
”நேற்று (27) டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள க்ரிவி ரிஹ் மாவட்டத்தின் குடியிருப்புகளில் ஒன்றின் ஷெல் தாக்குதலின் போது ரஷ்ய கூட்டமைப்பு தடைசெய்யப்பட்ட கொத்து குண்டுகளைப் பயன்படுத்தியது.
ரஷ்ய ஆயுதப் படைகள், சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் விதிமுறைகளைப் புறக்கணித்து, தடைசெய்யப்பட்ட ரொக்கெட்- “டொர்னாடோ-சி” ஐ பயன்படுத்தி தாக்குதல’ நடத்தியது” என்று செய்தியில் கூறப்பட்டுள்ளது.
தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய விபரம் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், அந்த பகுதியில் இராணுவ இலக்குகள் இருக்கவில்லையென்றும் உக்ரைன் கூறுகிறது.
எனினும், உக்ரைன் பொதுமக்கள் மத்தியில் இராணுவ இலக்குகளை மறைத்து வைப்பதாக ரஷ்யா குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.