பிம்ஸ்டெக் உச்சி மாநாடு இன்று கொழும்பில் தொடங்குகிறது.
தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளான இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பூட்டான், மியான்மர், நேபாளம், தாய்லாந்து ஆகிய 7 நாடுகளிடையே பொருளாதார ஒத்துழைப்புக்காக பிம்ஸ்டெக் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
பிம்ஸ்டெக்’ 5வது உச்சி மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பிக்கிறது. இன்றும் நாளையும் வெளிவிவகார அமைச்சர்கள் மட்டத்திலான மாநாடு நடைபெறுகிறது. 30ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய தலைமையில் நாடுகளின் தலைவர்கள் காணொலி வழியாக கலந்துரையாடுவர்.
இன்றும், நாளையும் நடைபெறும் வெளிவிவகார அமைச்சர்கள் மட்ட மாநாட்டிற்காக இந்தியா, பங்களாதேஷ், பூட்டான், நேபாளம், தாய்லாந்து ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் நேரடியாக பங்கேற்கிறார்கள். மியான்மர் வெளிவிவகார அமைச்சர் காணொலி காட்சியில் பங்கேற்று பேசுகிறார்.
30ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய தலைமையிலான காணொலி வழி மாநாட்டில் நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள்.