சீனாவில் கடந்த திங்கட்கிழமை (21) விபத்துக்குள்ளான போயிங் விமானத்தின் இரண்டாவது கருப்புப் பெட்டி இன்று (27) மீட்கப்பட்டுள்ளது.
சீனாவின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான Xinhua இதனை உறுதிசெய்துள்ளது.
குன்மிங் நகரிலிருந்து புறப்பட்ட அந்த விமானம், குவாங்சோ நகருக்குச் செல்லும் வழியில், மலைப்பகுதியில் மோதியது.
விமானத்தில் பயணம் செய்த 132 பேரும் உயிரிழந்தனர்.
அந்த பகுதியில் பெய்த மழை, நிலச்சரிவு காரணமாக இரண்டாவது கருப்பு பெட்டியை மீட்பதில் சில நாட்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இரண்டாவது கருப்பு பெட்டி மீட்கப்பட்டதன் மூலம், விபத்திற்கான துல்லியமான காரணத்தை கண்டறியலாமென சீனா அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1