தெல்லிப்பழை துர்க்கையம்மனில் நகைத் திருடர்கள் இருவர் சிக்கினர்!

Date:

தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தின் ஐந்தாவது கோபுரமான தலைவாசல் இராஜகோபுர கும்பாபிஷேக திருவிழாவில் பக்தர்களிடம் நகைகளைத் கொள்ளையிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.

கிளிநொச்சி சாந்தபுரத்திலிருந்து வந்த நால்வர் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களல் இரு ஆண்கள் கைது செய்யப்பட்டதுடன் பெண்கள் இருவர் தலைமறைவாகி விட்டனர். அவர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.

தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தின் ஐந்தாவது கோபுரமான தலைவாசல் இராஜகோபுர கும்பாபிஷேக திருவிழா நேற்று காலை இடம்பெற்றது.

திருவிழாவில் பங்கேற்ற பக்தர்கள் நால்வரிடம் தங்க நகைகள் அபகரிக்கப்பட்டன. அவர்களில் மூதாட்டி ஒருவரிடம் தங்கச் சங்கிலி அச்சுறுத்தி வாங்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் நகைகளைப் பறிகொடுத்த நால்வரும் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். அதனடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் ஆண்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

கிளிநொச்சி சாந்தபுரத்தைச் சேர்ந்த 33 மற்றும் 37 வயதுடைய இருவரும் வான் ஒன்றில் வந்துள்ளனர். அவர்களது கொள்ளைக்கு உதவிய பெண்கள் இருவர் தலைமறைவாகியுள்ளனர். அவர்களைத் தேடும் பணி பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகிறது.

சந்தேக நபர்கள் பயணித்த வான் பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்களிடமிருந்து கைச்சங்கிலி ஒன்றும் சங்கிலி ஒன்றும் கைப்பற்றப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்காவின் பி-52 குண்டுவீச்சு விமானம் விபத்து: 8 பேர் பலியாகியிருக்கலாமென அச்சம்!

கலிபோர்னியாவில் திங்களன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஒரு பி-52 ரக குண்டுவீச்சு...

சூரியவன்ஷிக்கு முன்னாள் இலங்கை கப்டன் வழங்கிய ஆலோசனை

முன்னாள் இலங்கை கப்டன் அனுர தென்னக்கோன், இந்திய இளம் நட்சத்திர வீரர்...

தென்மாகாண முன்னாள் முதல்வரின் தனிப்பட்ட செயலாளர் ஊழல் குற்றச்சாட்டில் கைது!

தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வாவின் தனிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்