பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 22 அம்ச யோசனைகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளது.
ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைத்தல், அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையைக் குறைத்தல், அத்தியாவசியமற்ற வளர்ச்சித் திட்டங்களை நிறுத்துதல், அத்தியாவசியமற்ற இறக்குமதிகளை கட்டுப்படுத்துதல், வெளிநாட்டுக் கடனுக்கான விவாதங்களை அரசாங்கங்களுடன் நடத்துதல் போன்ற பல முன்மொழிவுகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, அரசாங்கம் உண்மையை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆரம்பத்திலிருந்தே தெரிவித்திருந்தது.
தற்போதைய அரசாங்கத்தின் பிழையாக தற்போதைய நெருக்கடியை அவர்கள் பார்க்கவில்லை என்றும் தற்போதைய அரசாங்கத்திலும் குறைபாடுகள் இருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.