வாழ வழியின்றி தமிழகம் சென்ற இலங்கையர்களை மண்டபம் முகாமில் தங்க வைக்க ஏற்பாடு!

Date:

இலங்கையில் வாழ வழியில்லையென கூறி, தலைமன்னாரில் இருந்து படகு மூலம் செவ்வாய்க்கிழமை (22) இரவு ராமேஸ்வரத்திற்கு சென்ற 10 பேரையும் மண்டபம் இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் தங்க வைக்க ராமேஸ்வரம் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை (23) மாலை உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் உள்ள மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் மக்கள் 16 பேர் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை (22) அதிகாலை 6 பேர் அகதிகளாக வந்த நிலையில் அன்று இரவு ஒரு படகில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் அகதிகளாக தனுஷ்கோடி பகுதிக்கு சென்றுள்ளனர்.

தனுஷ்கோடி மீனவர்கள் கடலோர காவல் குழும அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அரசுத்துறை அதிகாரிகள் அவர்களை மீட்டு விசாரணை மேற்கொண்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் உள்ளடங்களாக 10 பேர் இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்திற்கு தஞ்சம் புகுந்ததாக வாக்குமூலம் வழங்கி உள்ளனர்.

அதனடிப்படையில் நேற்று புதன்கிழமை (23) ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் அனைவரும் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி விஜய்ஆனந்த் குறித்த 10 பேரையும் மண்டபம் இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் தங்க வைக்க உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் காவல்துறை அதிகாரிகள் 10 பேரையும் மண்டபம் இலங்கை தமிழர் அகதிகள் முகாமுக்கு பாதுகாப்புடன் அழைத்துச் சென்றுள்ளனர்.

இதேவேளை செவ்வாய்க்கிழமை காலை மன்னாரில் இருந்து சென்ற 2 குடும்பங்களைச் சேர்ந்த 6 பேர் மண்டபம் இலங்கை தமிழர் அகதிகள் முகாமுக்கு மாற்ற காவல்துறை நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

மாநகர சபை செயற்பாட்டுக்கு ஆணையாளர் முட்டுகட்டை! ஆளும் மற்றும் எதிர்தரப்பு உறுப்பினர்கள் போராட்டம்

யாழ் மாநகரின் ஆணையாளர் மற்றும் அதிகாரிகளின் இடையூறுகளுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும்...

மாமாங்கேஸ்வரர் ஆலய “தேர்” திருவிழா விண்ணைப் பிளந்த பல்லாயிரக்கணக்கானபக்தர்களின் அரோகரா கோஷம்

கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலமான மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின்...

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் அரசாங்கம் உறுதியான தீர்மானத்துக்கு வரவேண்டும்! – இம்ரான் எம்.பி

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் அரசாங்கம் உறுதியான தீர்மானம் ஒன்றுக்கு வரவேண்டும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்