இலங்கையில் மேலும் ஐந்து கொரோனா வைரஸ் தொடர்பான மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 16,445 ஆக உயர்ந்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கையில், இந்த ஐந்து மரணங்களும் மார்ச் 23 ஆம் திகதி நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
3 ஆண்களும் 2 பெண்களும் மரணித்தனர்.
60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய 2 ஆண்களும் 2 பெண்களும் மற்றும் 30 முதல் 59 வயதுக்குட்பட்ட ஆண் ஒருவரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு நேற்று மரணித்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1