சிவகார்த்திகேயனின் படத்தில் நடிக்க உக்ரைன் நடிகை ஒப்பந்தமாகியுள்ளார்.
நடிகர் சிவவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘டாக்டர்’. தற்போது சிவகார்த்திகேயன் டான், அயலான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர் அனுதீப் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கு ‘எஸ்.கே 20’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து சுரேஷ் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்த நிலையில் எஸ்.கே 20 படத்தின் கதாநாயகி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் ‘எஸ்.கே 20’ படத்தில் உக்ரைன் நாட்டை சேர்ந்த மாடல் அழகியும், நடிகையுமான மரியா ரியாபோஷாப்கா நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இவர் ஹாட்ஸ்டாரில் வெளியான ‘ஸ்பெஷல் ஆப்ஸ்’ இந்தி வெப் தொடரில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அந்த அறிவிப்பை பகிர்ந்து மரியா ரியாபோஷாப்காவிற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.
Delighted to welcome the gorgeous #MariaRyaboshapka onboard as the female lead in our #SK20 🎬@Siva_Kartikeyan @anudeepfilm @MusicThaman @SVCLLP @ShanthiTalkies #NarayanDasNarang@puskurrammohan @iamarunviswa pic.twitter.com/2j6AoHtemr
— Suresh Productions (@SureshProdns) March 21, 2022