25.9 C
Jaffna
January 1, 2025
Pagetamil
இந்தியா

சென்னையில் சிக்கிய போதை மாத்திரை கும்பல்: மூளையாக செயல்பட்ட இளம்பெண்ணும் சிக்கினார்!

வாட்ஸ்அப் குழுக்கள் அமைத்து அதன் மூலமாக கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்று வந்த சென்னை கும்பல் பிடிபட்டது. பிடிபட்ட 6 பேர் கொண்ட கும்பலில் பட்டதாரி இளம்பெண்ணும் இருந்தது கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இக்கும்பலிடம் இருந்து 4620 நைட்ரவிட் மாத்திரைகள், 2220 டைடல் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

வெளிமாநிலங்களில் இருந்து கூரியர் மூலம் போதை மாத்திரைகளை கடத்தி வந்து சென்னையில் விற்பனை செய்யும் பயங்கர கும்பல் செயல்படுகிறது என்று போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது . இந்த போதை கும்பல் போதை மாத்திரை என்கிற பெயரில் வலிநிவாரணி மாத்திரைகளை விற்பதாகவும் தெரிய வந்திருக்கிறது. மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் இந்த மாத்திரைகளை விற்கக் கூடாது. ஆனால் இந்த கும்பல் சட்டவிரோதமாக இந்த மாத்திரைகளை கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தெரியவந்தது.

வாட்ஸ்அப் குழுக்கள் அமைத்து அதன் மூலமாக போதை மாத்திரைகள் தேடும் கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்து அதன் மூலமாக போதை கும்பல் அந்த மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை சப்ளை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து இந்த கும்பலை கூண்டோடு கைது செய்ய வேண்டுமென்று சென்னை ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் போதை கும்பலை பிடிக்க தேடி வந்தபோதுதான் கோடம்பாக்கம் பகுதியை மையமாக கொண்டு இந்த கும்பல் செயல்படுவது தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதியில் தனிப்படை போலீசார் மாறுவேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது இளைஞர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமாக வகையில் வந்துள்ளனர். அந்த 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தி இருக்கிறார்கள். அவர்கள் வைத்திருந்த பையை சோதனை போட்டு இருக்கிறார்கள். அந்த பையில் அதிக போதை தரும் வலி நிவாரணி மாத்திரைகள் டைடல், நைட்ரவிட் போன்ற மாத்திரைகள் ஏராளமாக இருந்துள்ளன . அந்த மாத்திரைகளை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அந்த இருவரும் அசோக் நகரைச் சேர்ந்த கிஷோர் என்கிற இருபத்தி மூன்று வயது இளைஞரும், கே.கே. நகரைச் சேர்ந்த கிஷோர் குமார் என்கிற 20 வயது இளைஞனும் கைதாகி இருக்கிறார்கள். அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவர்கள் சொன்ன தகவலின் படி சென்னை கொத்தவால் சாவடி பகுதியைச் சேர்ந்த பூங்குன்றன் என்ற 26 வயது இளைஞர், ராஜபாளையத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்கிற 23 வயதுடைய இளைஞர், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அடுத்த கடமலைக்குண்டு சேர்ந்த கோகுலன் என்கிற 24 வயதுடைய இளைஞர், சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த ராஜலட்சுமி என்கிற 22 வயது இளம் பெண் ஆகிய மேலும் நான்கு பேரும் சிக்கியிருக்கிறார்கள்.

இவர்களிடமிருந்து 4620 நைட்ரவிட் மாத்திரைகள், 2220 டைடல் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. கருக்கலைப்புக்கு பயன்படும் மாத்திரைகளும் இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த கும்பலிடமிருந்து 4 லட்சத்து 41 லட்சம் ரொக்கப் பணமும், 2 மடிக்கணினிகள், ஒன்பது செல்போன்கள், 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ராஜலட்சுமி பட்டதாரி பெண். இந்த இளம்பெண் தான் கல்லூரி மாணவர்களிடம் போதை பழக்கத்தை ஏற்படுத்தி போதை மாத்திரைகள் விற்பதற்கு மூளையாக செயல்பட்டதாக தெரியவந்ததும் போலீசாரை அதிரவைத்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரூ.931 கோடி சொத்து: இந்தியாவின் பணக்கார முதல்வர் சந்திரபாபு நாயுடு

Pagetamil

தடையை மீறி போராட்டம்: சென்னையில் சீமான் கைது

Pagetamil

சென்னையில் மாணவியை ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற வழக்கில் முன்னாள் காதலருக்கு தூக்கு தண்டனை

Pagetamil

பாமக உட்கட்சி பிரச்சினை குறித்து மற்றவர்கள் பேச தேவையில்லை: அன்புமணி விளக்கம்

Pagetamil

75000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி

east tamil

Leave a Comment