சிங்கப்பூரில் 14 ஆண்டுகளாகத் தமது 4 மகள்களைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய தந்தைக்கு இன்று (18) 33 ஆண்டுகளுக்கும் அதிகமான சிறைத்தண்டனையும் அதிகபட்சமாக 24 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.
அந்த தந்தையின் செயல்கள் கொடூரமானவை என்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி கூறினார்.
45 வயதான தந்தை 2004 முதல் 2018 வரை தமது 4 மகள்களைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதை ஒப்புக்கொண்டார்.
2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், அவர் தமது மகள்கள் மீது கோபமாக இருந்தபோது அவர்களை பட்டினி போட்டார்.
பாலியல் துன்புறுத்தல், பாலியல் பலாத்காரம், மானபங்கம், குழந்தையை மோசமாக நடத்துதல் உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.
மற்ற பாலியல் துன்புறுத்தல் தொடர்பான 26 குற்றச்சாட்டுகள் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1