காகிதாதி மற்றும் மூலப்பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் இறுதித் தவணைப் பரீட்சைகளை நடத்துவதில் இடையூறு ஏற்பட்டுள்ளது.
இதன்படி, கல்வித் திணைக்களம் அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் கடிதம் மூலம் வழிகாட்டல்களை வழங்கியுள்ளது.
இதன்படி, 6, 7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதி மதிப்பீடுகளை மறுபரிசீலனை செய்ய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
தவணைப் பரீட்சைகளை நடத்தக்கூடிய மற்றும் தாள்கள் மற்றும் மூலப்பொருட்களுக்கான தேவையை பூர்த்தி செய்யக்கூடிய பாடசாலைகள் பரீட்சை அட்டவணையின்படி தொடரலாம்.
சிரமங்களை எதிர்கொள்ளும் பாடசாலைகள் பாடசாலை மட்டத்தில் வினாத்தாள்கள் மற்றும் அட்டவணைகளைத் தயாரிக்கலாம்.
4, 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான இறுதி மதிப்பீடுகளை ஏப்ரல் விடுமுறையின் பின்னர் நடத்த மேல் மாகாண கல்வித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.