அசாம் மாநிலத்தை சேர்ந்த ‘அரோமட்டிக் டீ’ என்ற நிறுவனம், உக்ரைன் ஜனாதிபதி பெயரில் ‘ஜெலன்ஸ்கி’ என்ற தேயிலையை அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் இயக்குனர் ரஞ்சித் பருவா கூறியதாவது:-
“உக்ரைன் ஜனாதிபதியின் துணிச்சலையும், வீரத்தையும் கவுரவிக்கும் வகையில் அவரது பெயரில் தேயிலை அறிமுகம் செய்கிறோம். உக்ரைனில் இருந்து தப்பிக்க செய்வதாக அமெரிக்கா விடுத்த அழைப்பை கூட அவர் நிராகரித்து விட்டார். அதற்கு பதிலாக ஆயுதங்கள் தருமாறு அவர் கூறினார். இது அவரது குணநலனை காட்டுகிறது.
வெற்றி என்பது அருகில் இல்லை என்பது நன்கு தெரிந்தும் அவர் இன்னும் போராடுகிறார். இந்த தேயிலை ஆன்லைனில் கிடைக்கும்“ என்றார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1