பிரித்தானியாவில் செக்ஸ் ரீச்சருக்கு 6 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
14 வயது மாணவனுடன் கார் தரிப்பிடத்தில் பாலியல் உறவு கொண்ட குற்றச்சாட்டில், 23 வயதான ஹன்னா ஹாரிஸ் என்பவரே தண்டிக்கப்பட்டுள்ளார்.
லண்டனின் வடக்கே உள்ள ஹெர்ட்ஃபோர்ட்ஷையரில் உள்ள ஒரு பாடசாலையின் 14 வயது சிறுவனுடன், டிசம்பர் 2019 மற்றும் ஜனவரி 2020 க்கு இடையில் பாலியல் உறவு கொண்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
சிறுவனின் காதலியின் தாயாக நடித்து, சிறுவனின் குடும்பத்தினரை அவர் ஏமாற்றி வந்துள்ளார். எனினும், சிறுவனின் மூத்த சகோதரர் அதனை கண்டுபிடித்ததை தொடர்ந்து, ‘செக்ஸ் ரீச்சர்’ அம்பலமானார்.
சென்ட் அல்பன்ஸ் கிரவுன் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாணையில், ‘செக்ஸ் ரீச்சர்’ ஹாரிஸ், சிறுவனின் கற்பனையான டீன் ஏஜ் காதலியின் தாயாக நடித்த தகவல்கள் வெளியாகின.
‘கெய்லா’ என்று அழைக்கப்படும் சிறுவனிற்கு ‘ஒலிவியா’ என்ற காதலி இருப்பதாகவும், தான் காதலியின் தாய் என்றும், சிறுவனின் பெற்றோரின் பேஸ்புக்கிற்கு தகவல் அனுப்பினார் ஹாரிஸ்.
அத்துடன், ஒலிவியாவுடன் பேசுவதெனில் தொடர்பு கொள்ளுங்கள் என ஒரு தொலைபேசி இலக்கத்தையும் கொடுத்தார்.
தமது வருங்கால மருமகளுடன் பேசும் ஆர்வத்தில், அந்த இலக்கத்தை தொடர்பு கொண்டு, சிறுவனின் பெற்றோர் பேசி வந்தனர்.
எனினும், அந்த இலக்கத்திலிருந்து செக்ஸ் ரீச்சர் ஹாரிசே பேசி வந்தார்.
சிறுவன் படிக்கும் பாடசாலையில் ஆசிரிய உதவியாளராக ஹாரிஸ் பணியாற்றினார்.
தமது பாடசாலையில் கற்கும் சிறுவனின் இன்ஸ்டகிராம் கணக்கை அடையாளம் கண்டு, அதன் மூலம் தொடர்பை ஏற்படுத்தினார் ஹாரிஸ்.
ஹாரிஸ் பையனை வெளியே அழைத்துச் சென்று, கஞ்சா புகைக்க அனுமதித்துள்ளார். அத்துடன், மக்டொனால்டுக்கு அழைத்துச் செல்வார். மேலும் அவருக்கு இனிப்புகள் மற்றும் ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுப்பார் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
சிறுவனிற்கு இல்லாத காதலியை உருவாக்கி, காதலியின் அம்மாவை நடித்து, வெளியிடங்களிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
எனினும், அவர்களிற்கிடையிலான தவறான தொடர்பை, சிறுவனின் மூத்த சகோதரன் கண்டறிந்தார்.
ஹாரிஸ் ஒரு சிறுவனுடன் உடலுறவு கொண்டதாக நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன, ஆனால் அவர் மூன்று குற்றங்களில் ஈடுபடவில்லை என மறுத்தார். அந்த குற்றங்களை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இருக்கவில்லை.
எனினும், பல்பொருள் அங்காடியொன்றின் கார் தரிப்பிடத்திடத்தில் சிறுவனுடன் உடலுறவு கொண்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. அவருக்கு கடந்த வியாழக்கிழமை ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.