போதையில் நடுவீதியில் வீழ்ந்த பெண் கைது!

Date:

வவுனியாவில் மது போதையில் பொதுப் போக்குவரத்துக்கு இடையூறாக செயற்பட்ட பெண் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா, தமிழ் மத்திய மகா வித்தியாலயம் முன்பாகவுள்ள வீதியில் பொதுப் போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தும் விதமாக பெண் ஒருவர் வீதியில் விழுந்து கிடந்துள்ளார்.

இதன்போது வீதியால் சென்றவர்கள் அதனை அவதானித்து அவசர நோயாளர் காவு வண்டிக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

அவர்கள் வந்து குறித்த பெண்ணை வைத்தியசாலை கொண்டு செல்ல நோயாளர் காவு வண்டியில் ஏற்ற முற்பட்ட போது குறித்த பெண் மது போதையில் விழுந்து கிடந்தமை தெரியவந்துள்ளதுடன், தொடர்ந்தும் குறித்த பெண் வீதியில் நடமாடி பொது போக்குவரத்துகு இடையூறாக விபத்து ஏற்படும் வகையில் வீதியில் நடமாடித் திரிந்துள்ளார்.

இதனையடுத்து பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து அங்கு வந்த போக்குவரத்து பொலிசார் குறித்த பெணணை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

spot_imgspot_img

More like this
Related

வவுனியாவில் மாணவர்களுக்கிடையே மோதல்: 2 பேர் வைத்தியசாலையில்!

வவுனியா இரட்டைப்பெரியகுளம் பகுதியில் இரு மாணவர் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில்...

19 கைத்துப்பாக்கிகள் மீட்பு

மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவினர், நேற்று (03) தெமட்டகொட பலித்த பகுதியில்...

சந்தி சிரிக்கும் விஜய் அமைச்சர்களின் கூத்துக்கள்!

‘தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்ற மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத், திருச்செந்தூர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்