பயங்கரவாத தடுப்பு (திருத்தம்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் மார்ச் 22ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் 22 ஆம் திகதி செவ்வாய்கிழமை முதல் தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது.
இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுக் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதன்படி, பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் (திருத்தம்) செவ்வாய்க்கிழமை இரண்டாம் வாசிப்பின் பின்னர் நிறைவேற்றப்படவுள்ளது.
பாராளுமன்றம் செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு கூடவுள்ளதுடன், பயங்கரவாத தடுப்பு (திருத்தம்) சட்டமூலம் மீதான விவாதம் முற்பகல் 11 மணி முதல் மாலை 4.30 மணி வரை இடம்பெறவுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1