லிட்ரோ மற்றும் லாப்ஸ் நிறுவனங்கள் சமையல் எரிவாயு விநியோகத்தை இன்று முதல் இடைநிறுத்த தீர்மானித்துள்ளன.
போதிளயவு எரிவாயு இருப்பு இலல்லாததால் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக இரண்டு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.
எனினும் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிவாயுவை விநியோகிப்பதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்த இரண்டு எரிவாயுக் கப்பல்களையும் விடுவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதற்காக டொலர்களைப் பெற்றுக்கொள்வதற்காக இரண்டு வாரங்களாக அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாகவும் லிட்ரோ தெரிவித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1