தேசிய பொருளாதார சபைக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் தேசிய பொருளாதார சபையொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், சபைக்கு ஆலோசனை வழங்குவதற்காக இந்த நிபுணர் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.
தேசிய பொருளாதார சபை நேற்று (14) முதன்முறையாக கூடியதுடன், இன்று காலை மீண்டும் கூடவுள்ளது. தேசிய பொருளாதார கவுன்சிலுக்கான இந்த நிபுணர் குழுவின் பிரதிநிதிகளும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1