விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே, சிறைச்சாலையில் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜூலியன் அசாஞ்சே தற்போது தென்கிழக்கு லண்டனில் உள்ள பெல்மார்ஷ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். லண்டனிலுள்ள ஈக்வடோர் தூதரகத்தில் அசாஞ்சே அடைக்கலம் புகுந்திருந்தார். எனினும், ஈக்வடோர் அவரை கைவிட்ட பின்னர், 2019 ஏப்ரலில் அவரை பிரித்தானிய பொலிசார் இழுத்துச் சென்றனர்.
அவர் கைது செய்யப்பட்டு 3 வருடங்கள் நிறைவடைவதற்கு சற்று முன்னதாக, மார்ச் 23 அன்று திருமணம் செய்து கொள்வார்.
அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்துப் போராடும் ஜூலியன் அசாஞ்சே, உயர் பாதுகாப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளர்.
ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போர்கள் தொடர்பான நூறாயிரக்கணக்கான கசிந்த ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டதைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்பு தகவல்களைப் பெற்று வெளியிட சதி செய்ததாக அவர் மீது அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
எனினும், அசாஞ்சே தவறை மறுத்துள்ளார். உலகெங்கிலும் உள்ள மனித உரிமை அமைப்புகள் மற்றும் பத்திரிகையாளர் குழுக்களும் அவரை ஆதரிக்கின்றன.
நான்கு விருந்தினர்கள் மற்றும் இரண்டு சாட்சிகள் விழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள், அத்துடன் இரண்டு பாதுகாப்பு காவலர்களும் அனுமதிக்கப்படுவார்கள் என திருமதி மோரிஸ் தெரிவித்தார்..
சிறைச்சாலையிலுள்ள கைதிகளை பார்வையிட விருந்தினர்களிற்கு அனுமதிக்கப்படும் நேரத்திலேயே திருமணம் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. நிகழ்வு முடிந்த உடனேயே அனைவரும் சிறையிலிருந்து வெளியேற வேண்டும்.
திருமணத்திற்கு புகைப்படக் கலைஞர் அனுமதிக்கப்படுவதற்கும் இந்த ஜோடி விண்ணப்பித்துள்ளது.
‘சூழ்நிலைகள் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும் நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். எங்கள் திட்டங்களில் நியாயமற்ற தலையீடுகள் தொடர்கின்றன. ஒரு மணி நேரம் புகைப்படக் கலைஞரை வைத்திருப்பது நியாயமற்ற கோரிக்கை அல்ல.
அனைத்து விருந்தினர்களும் சாட்சிகளும் விழா முடிந்தவுடனேயே வெளியேற வேண்டும், அது சாதாரண வருகை நேரம் முடிவதற்கு முன்பே இருக்கும்’ என மோரிஸ் கூறினார்.
திருமணம் செய்து கொள்ள இந்த ஜோடி பல மாதங்களிற்கு முன்னரே கோரிக்கை விடுத்திருந்தனர். தற்போது திருமணம் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஜோடி இறுதியாக கடந்த ஆண்டு நவம்பரில் திருமணம் செய்து கொள்ள பதிவு செய்தது, முன்னதாக சிறை ஆளுநர் மற்றும் நீதித்துறை செயலாளர் டொமினிக் ராப் ஆகியோர் விழாவைத் தடுக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டினர்.
பெல்மார்ஷ் சிறையில் அவரைச் சந்தித்த பிறகு, நவம்பரில் அவர் கூறினார்: ‘இன்று நானும் ஜூலியனும் இறுதியாக பெல்மார்ஷ் சிறைக்குள் திருமணம் செய்து கொள்ள எங்கள் விருப்பத்தை பதிவு செய்கிறோம். நாங்கள் முதலில் மூன்று வாரங்களுக்கு முன்பு அவ்வாறு செய்ய முன்பதிவு செய்தோம்.
இங்கிலாந்தில் வயதுக்கு வந்த அனைவருக்கும், அவர்கள் யாராக இருந்தாலும் அல்லது எங்கிருந்து வந்தாலும், அவர்கள் விரும்பியவரை திருமணம் செய்து கொள்வதற்கான அடிப்படை மனித உரிமை உள்ளது. இந்த உரிமை சட்டத்தில் எழுதப்பட்டுள்ளது.
ஜூலியன் மீது இந்த நாட்டில் எந்த குற்றமும் சுமத்தப்படவில்லை, அவர் தண்டனையை அனுபவிக்கவில்லை, அவரது சிறைவாசம் அவரது துன்பத்தை நீடிப்பதற்கும் மேலும் மோசமாக்குவதற்கும் தவிர வேறு எந்த நோக்கத்திற்கும் உதவாது.
இந்தச் சூழ்நிலையின் அநீதி விரைவாக முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்று நான் நம்புகிறேன், அதனால் அவர் விடுவிக்கப்பட்டவுடன் பெல்மார்ஷின் சுவர்களுக்கு வெளியே திருமணத்தை அனுபவிக்க முடியும்.” என்றார்.
இந்த ஜோடிக்கு நிச்சயதார்த்தம் நடந்து பல வருடங்கள் ஆன நிலையில், சட்டப்படி திருமணம் செய்து கொள்ள முயற்சி செய்து வருகின்றனர்.
லண்டனில் உள்ள ஈக்வடோர் தூதரகத்தில் தங்கியிருந்தபோது, ஸ்டெல்லா மோரிஸின் இரண்டு இரண்டு மகன்களுக்கு இரகசியமாக தந்தையானார்.
50 வயதான அவர் பாலியல் குற்றச்சாட்டை எதிர்கொள்வதற்காக ஸ்வீடனுக்கு ஒப்படைக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக 2012 இல் லண்டனிலுள்ள ஈக்வடோர் தூதரக கட்டிடத்திற்குள் நுழைந்தார். ஆனால் இறுதியில் கைவிடப்பட்டார்.
கேப்ரியல் மற்றும் மேக்ஸ் ஆகியோர் இந்த இணையரின் இரகசிய குழந்தைகள்.
ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போர்கள் தொடர்பான நூறாயிரக்கணக்கான கசிந்த ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டதைத் தொடர்ந்து, தேசிய பாதுகாப்புத் தகவல்களைப் பெறுவதற்கும் வெளியிடுவதற்கும் சதி செய்ததாகக் குற்றச்சாட்டின் பேரில் அசான்சே அமெரிக்காவில் தேடப்பட்டு வருகிறார்.
ஈக்வடோர் தூதரகத்திலிருந்து பொலிஸாரால் வெளியேற்றப்பட்ட பின்னர் 2019 முதல் பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.