பாட்டிக்கு ஏற்பட்ட கள்ளக்காதலால் ஒன்றரை வயது குழந்தை தண்ணீர் வாளிக்குள் அமிழ்த்திக் கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கேரள மாநிலம் அங்கமாலி பரக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் சஜூஸ். திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இவரது மனைவி வெளிநாட்டில் வேலை செய்வதற்காக சென்றுள்ளார். இதனால் சஜூஸின் இரு குழந்தைகளையும், அவரது தாயார் சிப்சி கவனித்து வந்துள்ளார்.
இதற்கிடையே அரசு மருத்துவமனைக்கு குழந்தையுடன் சென்ற சிப்சி குழந்தை வாளியில் இருந்த தண்ணீரில் தவறி விழுந்து விட்டது என்று கூறி உள்ளார். அதனை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டது என்று கூறி உள்ளனர். இதற்கிடையே சிப்சியை மடக்கிய போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில் கொல்லப்பட்ட குழந்தையின் பாட்டியான சிப்சியின் பயங்கர காதல் வெளிச்சத்திற்கு வந்தது.
மகனுக்கு திருமணமாகி பேரக்குழந்தைகள் உள்ள நிலையில் 51 வயதானாலும் தன்னை இளம் பெண் போல அலங்கரித்து கொள்ளும் வழக்கம் கொண்ட சிப்சிக்கு ஜான் பினோய் என்ற இளைஞருடன் தவறான தொடர்பு ஏற்பட்டுள்ளது.
சிப்சிக்கும், மகன் சஜூசுக்கும் குற்றப் பின்னணியுள்ள தகவல் தற்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
போதைப்பொருள் மற்றும் திருட்டு வழக்குகளில் அவர்கள் தண்டனை பெற்றவர்கள்.
சிப்சி ஓட்டல் மற்றும் லொட்ஜ்களில் இரு பேரப்பிள்ளைகளுடனும் வசித்து வந்தார். குழந்தைகளை பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர். குழந்தைகளுடன் வசித்து வந்ததால் யாருக்கும் சந்தேகம் வரவில்லை. சிப்சியின் காதலரான ஜான் பினோய் டி குரூஸ் ஒரு போதைப்பொருள் வியாபாரி. சிப்சிக்கு பல முறைகேடான உறவுகள் உள்ளன.
குழந்தைகளின் தாய் டிக்ஸி, குழந்தைகளை தேவையற்ற தேவைகளுக்கு பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது சொந்த வீட்டிற்கு சென்றிருந்தார்.
போதைப்பொருளில் ஈட்டிய பணத்தில் தனது பிள்ளைகள் வளர வேண்டாமென கூறி, வெளிநாட்டில் வேலைக்கு சென்று விட்டார்.
ஜான் பினோயும், குழந்தையின் பாட்டி சிப்சியும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். இதை ஜான் பினோயின் வளர்ப்பு தந்தை ஸ்டான்லி டிக்ரூஸ் மற்றும் வளர்ப்பு தாய் அல்டாசியா டிக்ரூஸ் ஆகியோர் வெளிப்படுத்தினர்.
பதிவாளர் அலுவலகத்தில் இருவரின் திருமண அறிவிப்பு காட்சிப்படுத்தப்பட்டது. இதை அக்கம்பக்கத்தினரின் மூலம் அறிந்ததும், ஸ்டான்லியும் அல்டாசியாவும் அலுவலகத்தில் பணம் செலுத்தி நோட்டீசை திரும்பப் பெற்றனர்.
கோவிட் தொற்றுநோய் தொடங்கிய காலத்தில் சிப்சியும் பினோயும் தங்கள் வீட்டில் மூன்று மாதங்கள் வாழ்ந்ததாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.
“வழக்கமாக இரவு எட்டு மணிக்குப் புறப்பட்டு விடியற்காலை நான்கு மணிக்குத் திரும்புவார்கள். எங்கே போனார்கள் என்று கேட்டபோது, எடப்பள்ளியில் உள்ள மருத்துவமனையில் பிஆர்ஓவாக வேலை செய்கிறோம் என்று சொன்னார்கள்.
கடந்த 5 ம் திகதி கொச்சியில் உள்ள ஓட்டல் ஒன்றில் தம்பதி எனக்கூறி இந்த காதல் ஜோடி அறை எடுத்து தங்கி உள்ளனர்.
அப்போது, அந்த குழந்தைகளின் உண்மையான தந்தை யார் என்ற தகராறு ஏற்பட்டுள்ளது. தனது காதலன் ஜான் பினோய்தான், மகனின் குழந்தைகளின் தந்தையென பாட்டியும், காதலியுமான சிப்சி கூறியுள்ளார். இதனால் சர்ச்சையாக, பாட்டி அறையை விட்டு சென்று விட்டார். குழந்தைகள் அறையிலேயே இருந்தன.
ஒன்றரை வயது நோரா மரியா, பாட்டியை காணாததால் அழுதுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஜான் பினோய், குளிலறையிலுள்ள தண்ணீர் வாளியில் குழந்தையை அமிழ்த்திக் கொன்றார்.
பின்னர் காதலி சிப்சிக்கு போன் செய்து, குழந்தை நோரா சுகவீனமடைந்து மயக்கமடைந்து விட்டதாக கூறியுள்ளார்.
இதையடுத்து அறைக்கு திரும்பிய சிப்சி குழந்தையை தூக்கிக் கொண்டு வைத்திசாலைக்கு சென்றார். காதலன் சொன்னதை போலவே, குழந்தை மயக்கமடைந்துள்ளதாக ஹொட்டல் நிர்வாகம், வைத்தியசாலையில் சிப்சி தெரிவித்தார்.
எனினும், பிரேத பரிசோதனையில் குழந்தையின் நுரையீரலுக்குள் தண்ணீர் சென்றதாலேயே உயிரிழந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் பினோய் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்துக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டான். சம்பவம் தொடர்பாக கொலை வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் கொலை செய்த பினோயையும் அவனுக்கு உடந்தையாக இருந்த சிப்சியையும் கைது செய்தனர்.
பின்னர் சிப்சி விடுவிக்கப்பட்டார்.
ஆனால், அவர் ஏன் ஹொட்டல் அறையை விட்டு வெளியேறினார், தந்தை வீட்டிலுள்ள போது குழந்தைகளை ஏன் தனது பாதுகாப்பில் வைத்திருந்தார், குழந்தைகளை மறைப்பாக வைத்து போதைப்பொருள் விற்பனை செய்ததாக தாய் தெரிவித்த முறைப்பாடு என்பவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார் என பொலிசார் தெரிவித்தனர்.