இந்தியாவின் கேரளா மாநிலத்தை சேர்ந்த ஒருவர், ஆப்கானிஸ்தானில் தற்கொலைத் தாக்குதல் நடத்தி உயிரிழந்துள்ளார்.
ஆப்கான், பாகிஸ்தான் எல்லையில் செய்படும், மிகப் பயங்கரமான அமைப்பான, இஸ்லாமிய தேசம்-கொராசன் மாகாணத்தில் (ISKP) உறுப்பினராக இருந், 23 வயதான நஜீப் என்ற மாணவரே தற்கொலை தாக்குதல் நடத்தியுள்ளார்.
கொராசன் பயங்கரவாத அமைப்பின் பிரச்சார ஊடகமான ‘கொராசனின் குரல்’ இதை அறிவித்தது.
உயிரிழந்தவர் 23 வயதான நஜீப், எம்டெக் மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கொராசனின் குரல் நஜீப்பின் படத்தையும் வெளியிட்டுள்ளது.எனினும், அவர் எப்போது கொல்லப்பட்டார் என்று அந்த அறிக்கையில் கூறப்படவில்லை.
அந்த செய்தியின் படி, நஜீப் தனது சொந்த விருப்பத்தின் பேரில் கேரளாவில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு சென்று பாகிஸ்தானிய பெண்ணை திருமணம் செய்து கொண்டு தற்கொலை தாக்குதலில் பங்கேற்றார்.
ஒரு பாகிஸ்தானிய பெண்ணை மணந்து சில மணி நேரங்களிலேயே நஜீப் கொல்லப்பட்டதால், நபிகள் நாயகத்தின் தோழர்களில் ஒருவரான ஹன்சாலா இபின் அபி அமிருடன் நஜீப்பை ஒப்பிட்டு கட்டுரை எழுதியுள்ளது. ஹன்ஸாலா தனது 24வது வயதில் உஹதுப் போரில் தனது திருமண இரவில் போர்க்களத்திற்குப் புறப்பட்டுச் சென்று இறந்தார்.
நஜீப்பை திருமணம் செய்யும்படி நண்பர்கள் வற்புறுத்தியதாகவும், அந்த நேரம் ISKP அமைப்பில் இருந்த ஒரு இளம் பெண் சார்பாக ஒரு பாகிஸ்தானிய குடும்பத்திலிருந்து ஒரு திருமண முன்மொழிவு வைக்கப்பட்டதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நஜீப்பின் திருமணத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட திகதியில், “கஃபர்” (நம்பிக்கை இல்லாதவர்கள்) “எங்கள் பகுதியில் முன்னேறத் தொடங்கினர் மற்றும் குண்டுவெடிப்பு தொடங்கியது” என்று கட்டுரை கூறுகிறது.
2021 ஓகஸ்ட் நடுப்பகுதியில் காபூலில் தலிபான் அதிகாரத்தை ஏற்றுக்கொண்டதில் இருந்து பல மோதல்கள் நடந்து வருகிறது. தலிபான்களை குறிவைத்து ISKP பல தற்கொலை தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஆப்கானிலிருந்து தப்பிச்செல்ல முயன்ற மக்கள் மீது விமான நிலையத்திலும் தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.