Pagetamil
இலங்கை

விமல் வீரவன்சவின் மனைவி வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

முன்னாள் அமைச்சர் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 2022ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் இன்று அறிவித்துள்ளார்.

போலி ஆவணங்களை பயன்படுத்தி கடவுச்சீட்டு பெற்றமை தொடர்பில் சசி வீரவன்சவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படவிருந்தது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து ராஜதந்திர கடவுச்சீட்டு உட்பட இரண்டு கடவுச்சீட்டுக்களை மோசடி செய்ததாக சஷி வீரவன்ச மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்காக போலியான பெயர்கள் மற்றும் பிறந்த திகதிகளுடன் ஆவணங்களை சமர்ப்பித்த வீரவன்ச, முதலில் 2015 பெப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அதன் பின்னர், 2020 ஜூலையில், கொழும்பு பிரதான நீதவான் சசி வீரவன்சவுக்கு பிடியாணை பிறப்பித்தார்.

இந்த வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட கொழும்பு பிரதான நீதவான் தீர்ப்பை எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்

இதையும் படியுங்கள்

வடக்கு அரச உத்தியோகத்தர்களின் கவனத்துக்கு: அலுவலகம் போகும்போது இடைநடுவில் நிற்கும் அபாயத்தை தவிர்க்க!

Pagetamil

நல்லூர் கந்தன் வடக்கு நுழைவாயில் வீதி வளைவுக்கு அடிக்கல்

Pagetamil

ஆற்றங்கரையோரம் ஒய்யாரமாக தூங்கும் யானைகள்

Pagetamil

பலாலி- வசாவிளான் வீதி கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டதால் நாமலுக்கு வந்த கவலை!

Pagetamil

‘எங்கள் ஆட்கள் யாராவது இராணுவத்துடன் சேர்ந்து இயங்கியதை நிரூபிக்க முடியுமா?’: கருணா விடும் புது ‘கப்சா’!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!