களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வழங்கல் வசதிகள், இயந்திரப் படகுகள் மற்றும் கப்பற் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்தை நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர், இராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
ஜயந்த சமரவீர, அண்மையில் தனது பதவியை இராஜினாமா செய்ததையடுத்து அப்பதவி வெற்றிடமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, அநுராதபுரதம் சிறைச்சாலையில் மதுபோதையில் நுழைந்து தமிழ் அரசியல்கைதிகளிற்கு கொலை மிரட்டல் விடுத்தல் விவகாரத்தில் நீதித்துறை விசாரணையை அவர் எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1