மன்னாரில் எரிவாயு இல்லாததால் உணவகங்கள் பல பூட்டு!

Date:

மன்னார் மாவட்டத்தில் நிலவி வருகின்ற எரிவாயு தட்டுப்பாட்டினால் அனேகமான உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.

கடந்த ஒரு வார காலமாக மன்னாரில் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை (9) மன்னார் நகரில் உள்ள அனேகமான உணவகங்களில் உணவு தயாரிக்க பயன்படுத்தி வந்த எரிவாயு முடிவடைந்த நிலையில் பல உணவகங்கள் மூடப்பட்டு வியாபார நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் வீடுகளில் எரிவாயுவை பயன்படுத்தும் மக்களும் எரிவாயு தட்டுப்பாட்டினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது ஒரு புறம் இருக்க தனியார் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசல் இன்மையால் வாகன உரிமையாளர்கள் பெரல்கள் மற்றும் கான்களுடன் எரிபொருள் நிலையங்களில் காத்திருக்கின்றனர்.

அரச எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அரச வாகனங்கள் மற்றும் முப்படையினருக்கு மாத்திரமே டீசல் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

தலைமுடியில் ‘பம்ப்’ அதிகம் எனக் கூறி 15 வயது மாணவனைக் காது மீது தாக்கிய பிரதி அதிபர் கைது!

இலங்கையின் நாத்தாண்டிய பகுதியில் உள்ள பிரபல பாடசாலையொன்றில், 15 வயதுடைய மாணவனை...

தலவாக்கலையில் இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – 27 பேர் காயம்!

நுவரெலியா, தலவாக்கலை – நானுஓயா சுற்றுவட்டப் பாதையின் டெஸ்போட் பகுதியில் இன்று...

உலகளாவிய ரீதியில் 7 மில்லியனுக்கும் அதிகமான முறைப்பாடுகள்! மைக்ரோசொப்ட் 365 சேவை பாரிய முடக்கம்!

நவீன உலகில் அலுவலகப் பணிகள், அரச நிர்வாகம் மற்றும் அத்தியாவசிய பொதுச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்